

நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களை கட்சியிலிருந்து வெளியேற்றினால்தான் காங்கிரசுக்கு இனி எதிர்காலம் உள்ளது என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா கூறியுள்ளார்.
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியதாவது:
பாஜகவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்பதையே உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. முத்தலாக் தடை சட்டம் கொண்டு வரப்பட்டதால் முஸ்லிம் பெண்கள் அதிக அளவில் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
காங்கிரசுக்கு மக்கள் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர். நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களை கட்சியிலிருந்து வெளியேற்றினால்தான் காங்கிரசுக்கு இனி எதிர்காலம் உள்ளது என்று கூறினார்.