Published : 10 Mar 2022 05:53 PM
Last Updated : 10 Mar 2022 05:53 PM
சென்னை: ”கோவா, மணிப்பூர், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் மக்களின் மனங்களை வென்றதற்கு வாழ்த்துகள்” என்று பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா என நான்கு மாநிலங்களை வசப்படுத்துகிறது பாஜக. இதன் மூலம் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் நான்கில் ஆட்சியில் அமரும் வாய்ப்பு பாஜகவுக்கு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடிக்கு வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “பொதுத் தேர்தல் நடந்த கோவா, மணிப்பூர், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை பெற்றதற்கும், மக்களின் மனதை வென்றதற்கும் வாழ்த்துகள். உங்களது தலைமையில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்கள் மூலமே இந்த வெற்றி வந்துள்ளது” என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT