அம்பேத்கர் 125-வது பிறந்தநாள் விழா: சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவிப்பு

அம்பேத்கர் 125-வது பிறந்தநாள் விழா: சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவிப்பு
Updated on
1 min read

டாக்டர் அம்.பேத்கரின் 125-வது பிறந்தநாளையொட்டி அவரது உருவச் சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

டாக்டர் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாள் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும் அம்பேத்கரின் உருவச் சிலைக்கும், உருவப் படத்துக்கும் மாலை அணிவித்து அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

முதல்வர் ஜெயலலிதா, போயஸ் தோட்ட இல்லத்தில் அம்பேத்கரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் கோடம்பாக்கம் ஆற்காடு சாலை யில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்தனர். ராஜாஜி சாலையில் துறைமுகம் வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் உருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் செய்தித்துறை செயலாளர் உதயசந்திரன், இயக்குநர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சென்னை சத்திய மூர்த்தி பவனில் அம்பேத்கர் படத்துக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகி கள் மரியாதை செலுத்தினர்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ஜி.ராம கிருஷ்ணன், இரா.முத்தரசன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நேரு உள்விளையாட்டுஅரங்கு அருகிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி; வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பெருந் தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்; சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு சமத்துவ மக்கள் கழகத்தின் பொருளாளர் கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in