

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி மேயராக சு. நாகரத்தினம் போட்டியின்றி தேர்வு பெற்றார்
ஈரோடு மாநகராட்சியில் திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் சார்பில், ஈரோடு நகர திமுக செயலாளர் சுப்பிரமணியணியத்தின் மனைவியும், 50வது வார்டில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளருமான சு.நாகரத்தினம் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த மேயர் பதவிக்கான தேர்தலில், சு.நாகரத்தினம் மட்டுமே மனு தாக்கல் செய்ததால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இதுகுறித்த அறிவிப்பை மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மேயராக தேர்வு பெற்றதற்கான அத்தாட்சிக் கடிதம் மற்றும் மேயர் அங்கி மற்றும் செங்கோல் ஆகியவை நாகத்தினத்தினற்கு வழங்கப்பட்டது. புதிய மேயருக்கு திமுக கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
மாலை நடக்கும் துணைமேயர் தேர்தலில், திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செல்வராஜ் போட்டியின்றி தேர்வு பெறுவார் என்ற நிலை உள்ளது.