விருதுநகரில் புதிய கட்சி தொடக்கம்

விருதுநகரில் புதிய கட்சி தொடக்கம்
Updated on
1 min read

விருதுநகரில் மருதநில மக்கள் கட்சி தொடங்கப்பட்டது.

விருதுநகரில் நேற்று நடைபெற்ற விழாவில் காவல்துறை முன்னாள் கூடுதல் டிஜிபி காமராஜா கட்சி அலுவலகத்தை திறந்துவைத்து கட்சிக் கொடியை ஏற்றினார். இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளரும் குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏவுமான சவுந்தரபாண்டியன் கூறும்போது, ‘‘மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் எங்கள் கட்சியில் உறுப்பினர்களாக உள்ளனர். கோரிக்கைகளை ஏற்கும் கட்சிகளுக்கு தேர்தலில் எங்கள் கட்சி ஆதரவு அளிக்கும். இல்லையெனில் குறிப்பிட்ட 10 தொகுதிகளில் மருதநில மக்கள் கட்சி போட்டியிடும்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in