மதுரையில் போக்குவரத்து மாற்றத்தால் திக்குமுக்காடும் வாகனங்கள்: பறக்கும் பாலப் பணியை துரிதப்படுத்த கோரிக்கை

மதுரையில் போக்குவரத்து மாற்றத்தால் திக்குமுக்காடும் வாகனங்கள்: பறக்கும் பாலப் பணியை துரிதப்படுத்த கோரிக்கை
Updated on
1 min read

மதுரை-நத்தம் சாலையில் பறக்கும் பாலம் அமைக்கும் பணிக்காக அவுட்போஸ்ட் பகுதியில் வாகன போக்குவரத்து மாற்றப்பட்டுள் ளதால் அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பிப். 20 முதல் அமலுக்கு வந் துள்ள போக்குவரத்து மாற்றத்தால் நத்தம் சாலை, தல்லாகுளம் பெரு மாள் கோயில் பகுதி, அவுட் போஸ்ட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இத னால் வாகன ஓட்டுநர்கள் திக்கு முக்காடுகின்றனர். வெளியூர்களில் இருந்து வருவோர் அழகர்கோவில் சாலை, நத்தம் சாலைக்கு செல்ல பெரிதும் சிரமப்படுகின் றனர். ஓரிரு வாரத்தில் இது சரியா கிவிடும் என போக்குவரத்து போலீ ஸார் தெரிவித்தாலும், தாமதமாக நடக்கும் பாலக் கட்டுமானப் பணியால் வாகன நெருக்கடி தொடருகிறது. கட்டுமான பணியை வேகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் கூறுகையில், ‘‘நத்தம் பறக்கும் பாலத்தின் இணைப்பு பகுதியான அவுட் போஸ்ட் வளை வில் இரண்டு ராட்சத தூண்கள் அமைக்க வேண்டியுள்ளது. அதற்கு கால அவகாசம் தேவை என கட்டுமான நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர். சித்திரை திருவிழா தொடங்குவற்குள் இப்பணியை முடிக்க கட்டுமான நிறு வனத்துக்கு நெடுஞ்சாலைத் துறை யினர் அறிவுறுத்தியுள்ளனர். ஒரு மாதத்துக்கு மேல் இப் போக்குவரத்து மாற்றம் நீடிக்க வாய்ப்புள்ளது. நாங்கள் எதுவும் செய்ய முடியாது.

நெடுஞ்சாலைத் துறை சார்பில், காவல் ஆணையர், போக்குவரத்து துணை ஆணையரை கேட்டுக் கொண்டதால் பாலம் கட்டு மானத்துக்கு இடையூறின்றி போக்குவரத்து மாற்றம் செய்து கொடுத்துள்ளோம்,’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in