ஈரோட்டில் தேர்தல் முறைகேடு தொடர்பாக 3 வழக்குகள் பதிவு: எஸ்.பி தகவல்

ஈரோடு வாக்குச்சாவடியில் ஆய்வு மேற்கொண்ட எஸ்பி சசிமோகன்
ஈரோடு வாக்குச்சாவடியில் ஆய்வு மேற்கொண்ட எஸ்பி சசிமோகன்
Updated on
1 min read

ஈரோடு: ஈரோட்டில் பதற்றமான 184 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என எஸ்பி சசிமோகன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 769 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் வாக்களிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 1,219 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்து 876 வாக்குப்பதிவு அலுவலர்கள் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றுகின்றனர். காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 184 வாக்குச் சாவடி மையங்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று ஈரோடு எஸ்பி சசிமோகன் கூறியது: ”ஈரோடு மாவட்டம் முழுவதும் 2500 -க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் உள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில், கூடுதலாக ஒரு எஸ்.ஐ. தலைமையில் 4 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு ஒவ்வொரு நடவடிக்கையும் தீவிரமாக போலீசார் கண்காணித்து வருகின்றனர். நுண் பார்வையாளர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் முறைகேடு தொடர்பாக மூன்று வழக்குகள் பதிவாகியுள்ளன” என்றார்.

*

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in