தேர்தல் தினத்தன்று தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு

தேர்தல் தினத்தன்று தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு
Updated on
1 min read

தமிழக தொழிலாளர் ஆணையர் பெ.அமுதா வெளியிட்டுள்ள செய் திக் குறிப்பு:

சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறும் மே 16-ம் தேதி தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும்.

கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் (ஐடி), உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், பீடி, சுருட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த பணியாளர்கள் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் தேர்தல் தினத்தன்று வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in