Published : 18 Feb 2022 08:33 AM
Last Updated : 18 Feb 2022 08:33 AM
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டன.
சென்னை மாநகராட்சி உட்பட தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. தேர்தல்அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் நேற்று முதல் நாளை இரவு வரை டாஸ்மாக் மதுபான கடைகளை மூட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. 3 நாட்கள் தொடர்ந்து மூடப்படுவதால் நேற்று முன்தினம் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது அருந்துவோரின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் சென்னை உட்பட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இன்று, நாளை மற்றும் வரும் 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நாட்களில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT