டி.கல்லுப்பட்டியில் சு.வெங்கடேசன் எம்பி வாக்கு சேகரிப்பு

டி.கல்லுப்பட்டியில் சு.வெங்கடேசன் எம்பி வாக்கு சேகரிப்பு
Updated on
1 min read

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி பேரூராட் சியில் 15 வார்டுகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சு.வெங் கடேசன் எம்பி பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதில் 4-வது வார்டு மார்க்சிஸ்ட் வேட்பாளர் எம்.செல்வி மற்றும் 14 வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து வீதிகள்தோறும் சென்று அவர் வாக்கு சேகரித்தார். மார்க்சிஸ்ட் புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், வி.முருகன், ஒன்றியச் செயலாளர் வி.சமயன், திமுக சார்பில் பேரூராட்சி பொறுப்பாளர் ராமமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் ஞானசேகரன், நகர் செயலாளர் முத்துகணேசன், மாணவரணி தலைவர் பாண்டிமுருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in