சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு பார்வையாளர் நியமனம்: சென்னையில் இன்று ஆய்வு செய்கிறார்

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு பார்வையாளர் நியமனம்: சென்னையில் இன்று ஆய்வு செய்கிறார்
Updated on
1 min read

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கான வாக்காளர் விழிப்புணர்வு பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சென்னையில் இன்று (சனிக்கிழமை) ஆய்வு செய்கிறார்.

தமிழக தேர்தல் தொடர்பான அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 4-ம் தேதி வெளியிட்டது. அன்றிலிருந்து, கடந்த மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்த மாவட்டங்களில் ஒன்றான சென்னை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப் பதிவை உறுதி செய்ய, மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்தரமோகன் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அனைத்து தொகுதிகளிலும், வாக்காளர் விழிப்புணர்வு பேரணிகள், மோட்டார் சைக்கிள் பேரணிகள், விழிப்புணர்வு கோல மிடுதல், கலைக்குழுக்கள் மூலம் தெருமுனை பிரச்சாரங்கள், கடற் கரை மணற்சிற்பம் மூலம் பிரச் சாரம், மாணவர்கள் மத்தியில் பிரச் சாரம், அனைத்து கல்லூரி மாணவர் களையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், இறந்தவர்கள் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காத வர்கள் ஆகியோரை அடையாளம் கண்டு அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குதல் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுமட்டுமல்லாது, சென்னை மாவட்டத்தில் உள்ள 3 ஆயிரத்து 769 வாக்குச் சாவடிகளில் குறைந்த வாக்குகள் பதிவான வாக்குச் சாவடிகளை அடையாளம் கண்டு, அங்கு துப்புரவு பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் விழிப்புணர்வு பிரச்சார பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்ய, தேர்தல் ஆணையம் சார்பில் 16 விழிப்புணர்வு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ் வொருவருக்கும் 2 மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு மத்திய அரசு அதிகாரி கல்பனாபந்த் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (சனிக்கிழமை) சென்னை வரும் அவர், ரிப்பன் மாளிகை யில் இயங்கி வரும் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் நடை பெற்று வரும் பணிகளை பார்வை யிடுகிறார். வாக்காளர் விழிப் புணர்வு ஏற்படுத்துவதற்காக மேற் கொண்டு வரும் பணிகள், 18 வயது நிறைவடைந்த மாணவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணிகள் தொடர்பாக அதிகாரிக ளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதனைத் தொடர்ந்து எழும்பூரில் நடைபெறும் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்திடும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு தொகுதியாக சென்று வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் குறித்து திங்கள்கிழமை வரை ஆய்வு செய்கிறார். பின்னர் திருவள்ளூர் மாவட்டத்தில் 3 நாட்கள் ஆய்வு செய்ய உள்ளார்.

ஒவ்வொரு தொகுதியாக சென்று வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் குறித்து திங்கள்கிழமை வரை ஆய்வு செய்கிறார். பின்னர் திருவள்ளூர் மாவட்டத்தில் 3 நாட்கள் ஆய்வு செய்ய உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in