10, 12-ம் வகுப்புகளுக்கு ஏப். 26-ல் பொதுத்தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு

10, 12-ம் வகுப்புகளுக்கு ஏப். 26-ல் பொதுத்தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு ஏப்ரல் 26-ம் தேதி தொடங்கும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ்வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா பரவல் காரணமாக, சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக முதல்கட்ட தேர்வு கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்டது.

கரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், பல்வேறு தரப்பினருடனான ஆலோசனைக்குப் பிறகு நேரடி முறையில் இரண்டாம் கட்ட தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, இரண்டாம் கட்டத் தேர்வு ஏப். 26-ம் தேதி தொடங்கும். இதற்கான விரிவான தேர்வுகால அட்டவணை, வாரிய இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in