‘தமாகா ஒரு கட்சியே அல்ல’: இளங்கோவன் கருத்து

‘தமாகா ஒரு கட்சியே அல்ல’: இளங்கோவன் கருத்து
Updated on
1 min read

தமிழக காங்கிரஸ் சேவாதள பிரிவின் மாநில செயற்குழு கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. அமைப்பின் தலைவர் குங்ஃபூ விஜயன் தலைமை வகித் தார். இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங் கோவன், தேசிய செயலாளர் சு.திருநாவுக்கரசர், செய்தித் தொடர்பாளர் குஷ்பு சுந்தர், ஜே.எம்.ஆருண், சேவாதள பொறுப்பாளர் பியாரி ஜான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக நிருபர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:

ஊடகங்களில் வெளியான தேர்தல் கருத்துக் கணிப்பு களை நம்பவில்லை. ஊடக முத லாளிகள் தங்கள் கருத்து களை திணிக்கின்றனர். மக்கள் மனதை நாங்கள் அறிவோம். ஜெயலலிதா கொலு பொம்மை போல உட்கார்ந்திருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் அவர் எந்த ஆக்கப்பூர்வமான திட்டத்தை யும் செயல்படுத்தவில்லை.

தமிழகத்தில் தற்போதே மின்வெட்டு கடுமையாக உள் ளது. இந்நிலையில், மத்திய மின்துறை அமைச்சரை சந்திக் காததன் மூலம் மக்கள் நலனில் தனக்கு அக்கறை இல்லை என்பதை ஜெயலலிதா நிரூ பித்துள்ளார். எனவே, அவர் அரசியலில் இருந்து விலக வேண்டும்.

திமுக கூட்டணியில் தமாகா இடம் பெறாது என்று ஸ்டாலின் கூறிவிட்டார். தமாகாவை ஒரு கட்சியாகவே கருதவில்லை. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளி யிடப்படும். சோனியாவும் ராகு லும் பிரச்சாரத்துக்காக தமிழகம் வருவார்கள்.

மின்வாரிய முன்னாள் பொறி யாளர் காந்தியின் ‘ஊழல் மின்சாரம்’ என்ற ஆவணப் படத்தை வெளியிட அரசு தடை விதித்துள்ளது. இது ஜன நாயகப் படுகொலை. இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

அக்கறை இல்லாத ஜெ.

குஷ்பு கூறும்போது, தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக வுக்கு காங்கிரஸ் எந்த நிபந்த னையும் விதிக்கவில்லை. முதல் வரை சந்திக்க முடியவில்லை என்ற மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு ஜெய லலிதா இதுவரை பதில் அளிக்க வில்லை. இதில் இருந்தே அவ ருக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை என்பது தெரிகிறது. கடந்த 5 ஆண்டுகளில் வாக் களித்த மக்களையே சந்திக் காத ஜெயலலிதா, மத்திய அமைச்சர்களை எப்படி சந்திப் பார்? திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்து வதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் நாளை (இன்று) சென்னை வருகிறார்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in