மகாவீர் ஜெயந்தியன்று இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு

மகாவீர் ஜெயந்தியன்று இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு
Updated on
1 min read

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 19-ம் தேதி சென்னையில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளையும் மூடுமாறு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறை (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள், வரும் 19-ம் தேதி (செவ்வாய்க் கிழமை) மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அரசு உத்தரவின்படி அனைத்து இறைச் சிக் கூடங்களும் மூடப்படுகின்றன. இதேபோல் ஆடு, மாடு, இதர இறைச்சி விற்பவர்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, அரசு உத்தரவின்படி அன்றைய தினம் அனைத்து இறைச்சிக்கூடங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. அரசு உத்தரவினை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in