கோவை, திருப்பூரில் 13-வது நாளாக தொடர்ந்த விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்தத்தால் ரூ.700 கோடிக்கு துணி உற்பத்தி பாதிப்பு

கோவை, திருப்பூரில் 13-வது நாளாக தொடர்ந்த விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்தத்தால் ரூ.700 கோடிக்கு துணி உற்பத்தி பாதிப்பு
Updated on
1 min read

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் 13-ம் நாளாக நேற்றும் தொடர்ந்தது. இதுவரை ரூ.700 கோடி மதிப்பில் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர் மாவட்டங் களில் சுமார் இரண்டரை லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உற்பத்தியாளர்கள் 35,000 பேர் இவ்விரு மாவட்டங்களிலும் உள்ளனர். கடந்த 1992-ம் ஆண்டு தொடங்கி3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலிஉயர்வு ஒப்பந்தம் கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2014-ம்ஆண்டுமுதல் கடைபிடிக்கப் படவில்லை.

இத்தகைய சூழலில், பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு கடந்த நவம்பர் மாத இறுதியில் கூலி உயர்வு ஒப்பந்தம் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறியாளர்களிடையே கையெழுத்தா னது. டிசம்பர் 1-ம் தேதி கூலி உயர்வு அமல்படுத்தப்பட வேண்டிய நிலையில், கூலி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள விசைத்தறியாளர்கள் கடந்த 9-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றும் 13-ம் நாளாக போராட்டம் தொடர்ந்தது. இதனால் ரூ.700 கோடி மதிப்பில் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக கோவையில் நேற்று முன்தினம் நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், வரும் 27-ம் தேதிக்கு பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்க செயலாளர் எம்.பாலசுப்ரமணியம் கூறும்போது, ‘‘ஒப்புக் கொண்ட கூலி உயர்வு வழங்கப் படாததைக் கண்டித்து வரும் 24-ம் தேதி திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்,’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in