Published : 17 Jan 2022 01:05 PM
Last Updated : 17 Jan 2022 01:05 PM

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பறவைகள் கணக்கெடுப்பு ஜன. 20-ல் தொடக்கம்: தன்னார்வலர்கள் முன்பதிவு செய்ய வேண்டுகோள்

திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 12-வது தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பு வரும் 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக ஒருங்கிணைப் பாளர் மு. மதிவாணன் கூறியதாவது:

இக்கணக்கெடுப்பை மணிமுத் தாறு, அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம், தூத்துக்குடி முத்து நகர் இயற்கை சங்கம், நெல்லை இயற்கைச் சங்கம் மற்றும் திருநெல்வேலி மண்டல வனத்துறை இணைந்து மேற்கொள்கின்றன.

வடகிழக்கு பருவமழை காலத்தில் கூடுதலான மழைப்பொழிவின் காரணமாக திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் குளங்கள் நிரம்பி வழிகின்றன. ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பறவைகள் இக்குளங்களில் குவிந்துள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூந்தன்குளம், வடக்கு கழுவூர், நயினார்குளம், தென்காசி மாவட்டம் வாகைக்குளம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் செட்டிக்குளம் போன்ற குளங்களில் உள்நாட்டுப் பறவைகள் ஆயிரக்கணக்கில் கூடுகட்டி இனப்பெருக்கத்தில் ஈடுபட்டுள்ளன. இப்பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களான நீர்நிலைகளை பாதுகாக்கும் பொருட்டு 12-வது ஆண்டைாக தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பு இம்மாவட்டங்களில் நடைபெறு கிறது. கணக்கெடுப்பில் கலந்து கொள்ள விரும்பும் தன்னார் வலர்கள் https://forms.gle/NPF2eiWvQ25ivF6WA என்ற லிங்கில் பதிவு செய்யலாம். மேலும் twbc2020@gmail.com மின்னஞ்சல் மூலமும், செல்போன் எண் 9994766473 வழியாகவும் பதிவு செய்ய வரும் 19-ம் தேதி கடைசி நாளாகும்.

பதிவு செய்த தன்னார்வலர் களுக்கு இணையவழியில் பயிற்சி நடத்தப்படும். அதனை தொடர்ந்து அவர்கள் சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு மாவட்டங்களில் உள்ள 60 குளங்களில் கணக்கெடுப்பை மேற்கொள்வார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x