முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு கரோனா

முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு கரோனா
Updated on
1 min read

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் நேற்று கரோனா பரிசோதனை செய்தார். அப்போது லேசான அறிகுறிகளுடன் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நான் இன்று (நேற்று) கரோனா பரிசோதனை செய்ததில், லேசான அறிகுறியுடன் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உங்களைதனிமைப்படுத்தி கொண்டு கரோனா பரிசோதனை செய்து கொள்ளுங் கள் என குறிப்பிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி கடந்த 12-ம் தேதி காந்தி நகரில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரே இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து, அவர் 13-ம் தேதி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in