

பழநி: தமிழக அரசு விதித்துள்ள கரோனாகட்டுப்பாடுகளில் வெள்ளி, சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்களில் பொதுமக்கள் வழிபாடு நடத்த அனுமதி கிடையாது. இதனால், திண்டுக்கல் மாவட்டத்தில் கோயில்கள், ஆலயங்கள், மசூதிகளுக்கு செல்ல நேற்று அனுமதி மறுக்கப்பட்டது.
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழநிக்குப் பாத யாத்திரையாக வந்த பக்தர்கள் அடிவாரத்திலேயே சுவாமி கும்பிட்டுவிட்டு திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில் பழநி காந்தி ரோடு பகுதியில் உள்ள சின்னப் பள்ளிவாசலில் நேற்று பகலில் சிலர் வழிபாடு நடத்துவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. போலீஸார் அங்கு சென்றபோது பள்ளிவாசலின் முன்வாசல் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பின்வாசல் வழியாகச் சென்று தொழுகை நடத்தியது தெரிந்தது. அரசின் தடையைமீறி பள்ளிவாசலில் தொழுகைநடத்தியோருக்கு உடனடியாகவெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.