

அருப்புக்கோட்டை அதிமுக வேட்பாள ராக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று இரவு வெளியிட்டார்.
முன்னதாக நேற்றுமுன்தினம் வெளி யிடப்பட்ட அதிமுக வேட்பாளர் பட்டியலில் அருப்புக்கோட்டை தொகுதி அதிமுக செயலாளரான எம்.ஜி.முத்துராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் முத்துராஜா மாற்றப்பட்டு வைகை செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.