

மகா சிவராத்திரியை முன்னிட்டு ‘சம்போ சிவ சம்போ’ என்ற தொடர் ஆன்மிக இரவு நிகழ்ச்சி, எஸ்எஸ் இன்டர்நேஷனல் லைவ் அமைப்பு சார்பில் சென்னை மியூசிக் அகாடமியில் வரும் 7-ம் தேதி நடக்கிறது.
இது தொடர்பாக எஸ்எஸ் இன்டர்நேஷனல் லைவ் அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
மகா சிவராத்திரியை முன்னிட்டு, ‘சம்போ சிவ சம்போ’ என்ற தொடர் ஆன்மிக இரவு நிகழ்ச்சி சென்னை மியூசிக் அகாடமியில் வரும் 7-ம் தேதி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நடக்க உள்ளது. இதில் இடைவிடாது பக்தி பாடல்கள், ஆன்மிக நடன நிகழ்ச்சிகள், பக்தி சொற்பொழிவுகள் ஆகியவை நடைபெறும். ஒவ்வொரு நிகழ்வும் தலா 30 நிமிடங்கள் நடக்கும்.
பிரபல இசைக் கலைஞர்கள் அருணா சாய்ராம், ஓ.எஸ்.அருண், சைந்தவி பிரகாஷ், செளமியா, மாண்டலின் ராஜேஷ், அனில் சீனிவாசன், விக்கு விநாயக்ராம், நித்ய, உமாசங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். அனுமதி இலவசம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.