ஆரணி அடுத்த பையூர் கிராமத்தில் தந்தை, மகளுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி: ஆற்காட்டில் 3 பேரின் மாதிரிகள் சேகரிப்பு

ஆரணி அடுத்த பையூர் கிராமத்தில் தந்தை, மகளுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி: ஆற்காட்டில் 3 பேரின் மாதிரிகள் சேகரிப்பு
Updated on
1 min read

திருவண்ணாமலை/ஆற்காடு: ஆரணி அடுத்த பையூர் கிராமத்தில் தந்தை மற்றும் மகளுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் தொற்றுப் பரவல் தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பையூர் கிராமத்தைச் சேர்ந்த 38 வயது பெண், தனது கணவர் மற்றும் மகனுடன், காங்கோ நாட்டில் இருந்து சென்னைக்கு கடந்த 12-ம் தேதி வந்துள்ளார். அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் கரோனா மற்றும் ஒமைக்ரான் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் மூவரும், பையூர் கிராமத்துக்கு வந்துள்ளனர்.

இதற்கிடையில், 38 வயது பெண்ணுக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அவர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஒமைக்ரான் சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என சுமார் 150 பேருக்கு கரோனா மற்றும் ஒமைக்ரான் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அப்பெண்ணின் 65 வயது உள்ள தந்தை மற்றும் 35 வயது உள்ள தம்பிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர்கள் இருவரும், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் காங்கோ நாட்டில் இருந்து நாடு திரும்பிய 38 வயது பெண் மற்றும் அவரது தந்தைக்கு ‘ஒமைக்ரான்’ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்று உறுதியானது. அப்பெண்ணின் தம்பிக்கு பரிசோதனை முடிவு வரவில்லை.

3 பேரின் மாதிரி சேகரிப்பு

ஒமைக்ரான் தொற்று உள்ளநெருங்கிய பெண் உறவினர்ஒருவர் சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடுஅடுத்த தாஜ்புரா பகுதிக்கு வந்துஉள்ளார். இப்பகுதியில் அவரது வீட்டில் இருந்த மொத்தம் 6பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 3 பேருக்கு கரோனாதொற்று நேற்று உறுதியாகிஉள்ளது. 3 பேரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய ஆய்வுக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களின் வீட்டைகட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக சுகாதாரத் துறையினர் அறிவித்துஉள்ளனர். அந்தத் தெருவில் உள்ளவர்களுக்கு கரோனா பரிசோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்ட நிலையில் மருத்துவக் குழுவினர் முகாம் அமைத்து யாருக்காவது காய்ச்சல் உள்ளதா என்றும் பரிசோதித்து வருகின்றனர்.

இதற்கிடையே, திருவண்ணாமலை மாவட்டத்தில் கண்காணிப்புமற்றும் தொற்றுப் பரவல் தடுப்புநடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுஉள்ளது. இதுதொடர்பாக சுகாதாரம், உள்ளாட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் பா.முருகேஷ் ஆலோசனை நடத்தினார். ஒரே இடத்தில் மக்கள் அதிகம் கூடுவதை தடுக்கவும், பூங்கா மற்றும் அணைகளை திறக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மேலும் விரிவுபடுத்தவும் அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in