

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில்ஈடுபட்ட அரசு போக்குவரத்து கழக நடத்து நர், உடந்தையாக இருந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் அருகே கோனூர் கிராமத்தைச் சேர்ந்தஇளம்பெண்(20) சென்னையில் கல்லூரி ஒன்றில் படிக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இவர் காதல் திருமணம்செய்துள்ளார். நேற்று முன்தினம் கெடிலத்தில் உள்ள தன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டு, மாலை கோனூர் செல்ல அரசுப் பேருந்து ஒன்றில் பயணித்துள்ளார்.
அந்தப் பேருந்தில்இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அன்புச்செல்வன் (45) ஓட்டுநராகவும், பண்ருட்டி அருகே குடுமியான் குப்பத்தைச் சேர்ந்தசிலம்பரசன் (32) நடத்துநராகவும் பணியில் இருந்துள்ளனர்.
விழுப்புரத்தில் இருந்து புறப்பட்ட பேருந்தில் இருந்தபயணிகள் சில நிறுத்தங்களில் இறங்கிவிட, அந்தப் பெண் மட்டும் தனித்து பயணித்துஉள்ளார். அப்போது நடத்துநர் சிலம்பரசன் அப்பெண் ணுக்கு பாலியல் தொல்லைகொடுத்ததாகக் கூறப்படுகிறது. பேருந்தை நிறுத்துமாறு கூச்சலிட்டும் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தவில்லை.
ஒருகட்டத்தில் அப்பெண், பேருந்து மெதுவாக செல்லும்போது, பேருந்தில் இருந்துகுதித்து தப்பியுள்ளார். பின்னர் இதுகுறித்து தன் உறவினர்களிடம் கூறியிருக்கிறார். அவர்கள் அந்தப் பேருந்து ஓட்டுநர், நடத்துநரை பிடித்து காணை காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ஒப்படைத்தனர்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைதுசெய்தனர். இதற்கிடையேஅன்புச்செல்வன், சிலம்பரசன் ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்து போக்குவரத்து கழக பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.