

சட்டப்பேரவைத் தேர்தலில் தங்க ளின் வாரிசுகளுக்கு சீட் கேட்டு தலைமையை முக்கிய நிர்வாகி கள் பலர் நெருக்குவதால் புதிய வர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமோ என்ற ஆதங்கம் திமுகவில் எழுந்துள்ளது.
அதிமுகவில் கடைக்கோடி தொண்டனுக்கும் அமைச்சர் பதவி சாத்தியமாகிறது. அந்தக் கட்சியில் யாருக்கு சீட் என்பதைக்கூட நிச்சய மாக சொல்ல முடியாது. ஆனால், திமுகவில் அப்படி இல்லை. தேர்த லில் திமுக வெற்றி பெற்றால் துறை வாரியான முக்கிய அமைச்சர்களைக் கூட இப்போதே யூகித்துவிட முடியும். இப்படி திரும்பத் திரும்ப குறிப்பிட்ட நபர்களையே அமைச்சராக்குவதால் கட்சி வளர்ச்சி அவர்களுக்குள்ளேயே சுருங்கிப் போய்விடுகிறது என்று ஆதங்கப்படுகின்றனர் திமுக தொண்டர்கள். ‘‘ஆதிக்கம் செலுத்தும் மாவட்டச் செயலாளர்களின் அதி காரத்தை குறைப்பதற்காக பல மாவட்டங்கள் இரண்டு, மூன்றாக பிரிக்கப்பட்டன. ஆனால், ஒன்றுபட்ட அதிகாரத்தை வைத்திருந்தவர்கள், பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் தங்களது பினாமிகளையே செய லாளர்களாக ஆக்கி விட்டனர்’’ என் கிறார்கள் அவர்கள்.
இந்நிலையில், முன்னாள் அமைச் சர்களும் மாவட்டச் செயலாளர்களும் இந்தத் தேர்தலில் தங்கள் வாரிசு களுக்கும் இடம்பிடிக்கத் தயாராகி றார்கள். கட்சியின் பொதுச் செய லாளர் க.அன்பழகன் தனது பேரன் வெற்றிக்கும், பொன்முடி தனக்கும் தனது மகன் கவுதம சிகாமணிக்கும் சீட் கேட்டுள்ளனர். ஐ.பெரியசாமி தனக்கும் தனது மகன் ஐ.பி.செந்தில்குமாருக்கும் (இவர்கள் இருவருக்கும் கடந்தமுறையே வாய்ப்பளிக்கப்பட்டது), என்.பெரியசாமி தனது மகன் ஜெகன், மகள் கீதா ஜீவன் ஆகியோருக்கும் முன்னாள் அமைச்சர் சுப.தங்க வேலன் தனக்கும் தனது மகன்கள் திவாகரன், சம்பத் இருவருக்கும் வாய்ப்பு கேட்கிறார்கள்.
முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு தனது மகன் டி.ஆர்.பி.ராஜாவுக்கும் (இவர் இப்போது எம்எல்ஏ), எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தனது தம்பி ராஜ்குமாருக்கும் சீட் கேட்கின்றனர். தேனி மாவட்டச் செய லாளர் மூக்கையா தனக்கும் தனது மகன் பெரியபாண்டிக்கும், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தனக் கும் தனது மகன் பிரபாகரனுக்கும், பொங்கலூர் பழனிச்சாமி தனது மகன் பைந்தமிழ் பாரிக்கும், தஞ்சை எல்.கணேசன் தனது மகன் அண்ணா வுக்கும், முன்னாள் அமைச்சர் மு.கண் ணப்பன் தனது மகன் மு.க.முத்து வுக்கும் சீட் கேட்கிறார்கள்.
மறைந்த அன்பில் பொய்யாமொழி யின் மகன் அன்பில் மகேஷ், இவரது சித்தப்பா அன்பில் பெரிய சாமி, மறைந்த பிடிஆர் பழனிவேல் ராஜனின் மகன் தியாகராஜன், கோ.சி.மணியின் மகன் இளங்கோ உள்ளிட்டவர்களும் வாய்ப்பு கேட்கிறார்கள். இதையெல்லாம் சுட்டிக்காட்டி ஆதங்கப்படும் திமுக வின் அடிமட்டத் தொண்டர்கள், ‘‘வாரிசுகளுக்கும் கட்சியின் 65 மாவட்டச் செயலாளர்களில் பெரும் பகுதியினருக்கும் 18 துணை அமைப்புகள் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளில் கணிசமானவர்களுக் கும் வாய்ப்பளிக்க தலைமை தீர் மானித்தால் புதியவர்களுக்கு வாய்ப்பே இருக்காது. 50 சதவீதம் புதியவர்களுக்கு வாய்ப்பு என சொல்லிவரும் தலைமை குறைந்த பட்சம், மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 32 புதுமுகங்களுக்காவது வாய்ப்பளித்தால்தான் கட்சியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முடியும்’’ என்கிறார்கள்.
முன்னாள் அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும் இந்தத் தேர்தலில் தங்கள் வாரிசுகளுக்கும் இடம்பிடிக்கத் தயாராகிறார்கள்.