ஒலிம்பிக், பாராலிம்பிக்கில் வென்ற வீரர்களை கவுரவித்த எல்ஐசி

ஒலிம்பிக், பாராலிம்பிக்கில் வென்ற வீரர்களை கவுரவித்த எல்ஐசி
Updated on
1 min read

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மற்றும் டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் சாதனைபுரிந்து, இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீரர்கள் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) சார்பில் கவுரவிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக எல்ஐசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: டோக்கியா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்களின் செயல்பாடுகள் உண்மையிலேயே பாராட்டத்தக்கவை. அவர்கள் மூலம் நாட்டுக்கு தங்கப் பதக்கம் உட்பட 7 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்ற வீரர்கள் மட்டுமின்றி, கடுமையாகப் போராடி வெற்றி வாய்ப்பை தவறவிட்டு 4-ம் இடம் பிடித்த வீரர்களும் எல்ஐசி சார்பில் கவுரவிக்கப்பட்டனர்.

வீரர்களின் சொந்த ஊர்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, எல்ஐசியின் மூத்த பிரமுகர்களால் வீரர்களுக்கு ரொக்கப் பரிசு, விருது வழங்கப்பட்டது.

அதேபோல, அண்மையில் நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியிலும் இந்தியவீரர்கள் வியக்கத்தக்க சாதனைகளைப் படைத்தனர். இதுவரை இல்லாத வகையில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை வென்றனர்.

வெற்றி பெற்ற வீரர்களுடன், 4-ம் இடம் பிடித்த 7 வீரர்களுக்கும், அவர்களின் ஊர்களிலேயே பாராட்டு விழா நடத்தப்பட்டு, எல்ஐசி சார்பில் ரொக்கப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in