கோவா முன்னாள் எம்எல்ஏக்கள் புதுச்சேரி சபாநாயகருடன் சந்திப்பு

கோவா முன்னாள் எம்எல்ஏக்கள் புதுச்சேரி சபாநாயகருடன் சந்திப்பு
Updated on
1 min read

புதுச்சேரிக்கு வருகை தந்த கோவா முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் சட்டப்பேரவை அதிகாரிகள் புதுச்சேரி சபாநாயகரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

கோவா மாநில சட்டப்பேரவையின் முன்னாள் எம்எல்ஏக்கள் விக்டர் கோன்சால்விஸ், மோகன் அமேஹஸ்கர், உலாஸ் அஷ்னோட்கர், தர்மா சதோன்கர், விஷ்ணுபிரபு மற்றும சட்டப்பேரவை இணை செயலர் ஹெர்குலஸ் நெரோன்கா, கிஷோர்சிரிகோன்கர், உதவி கணக்கு அதிகாரி திலிப் பர்வார்கர், சட்டப்பேரவை காவல் அதிகாரி தீபக் போன்சால், சட்டப்பேரவைத் தலைவர் உதவியாளர் கரிக்கர் ஆகியோர் அடங்கிய குழுவினர் புதுச்சேரிக்கு வருகை தந்தனர். இவர்கள் புதுச்சேரி சபாநாயகர் செல்வத்தை சட்டப்பேரவையில் உள்ள அலுவலகத்தில் இன்று(நவ.24) சந்தித்துப் பேசினர்.

அப்போது, புதுச்சேரி மாநில சட்டப் பேரவையின் செயல்பாடுகள், இங்கு பயன்படுத்தப்படும் விதிமுறைகள் மற்றும் இங்குள்ள கலாச்சாரம் குறித்துக் கேட்டறிந்தனர். மேலும் சுற்றுலாவை மையமாக வைத்து கோவா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் செயல்படுகின்றன.

அதன்படி இவ்விரு மாநிலங்களிலும் சுற்றுலா மற்றும் அதன்மூலம் கிடைக்கும் வருவாய் உள்ளிட்டவை எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர். பின்னர் புதுச்சேரி சபாநாயகர், எம்எல்ஏக்கள் கோவா வர வேண்டுமென, அம்மாநில முன்னாள் எம்எல்ஏக்கள் அழைப்பு விடுத்தனர்.

இந்த சந்திப்பின்போது புதுச்சேரி அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், வைத்தியநாதன், கே.எஸ்.பி.ரமேஷ், லட்சுமிகாந்தன், ரிச்சர்ட் ஜான்குமார், பாஸ்கர் ( எ ) தட்சணாமூர்த்தி, பிரகாஷ்குமார் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் முனிசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in