Last Updated : 15 Nov, 2021 07:12 AM

 

Published : 15 Nov 2021 07:12 AM
Last Updated : 15 Nov 2021 07:12 AM

கரோனா ஊக்கத்தொகை வழங்காததால் ஊர்க்காவல் படையினர் ஏமாற்றம்

ஆறு மாதமாகியும் கரோனா தடுப்பு பணிக்கான ஊக்கத் தொகை வழங்கப்படாததால் ஊர்க்காவல் படையினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஊர்க்காவல் படையினர் கூறியதாவது: மதுரை நகரில் கரோனா பரவல் காலத்தில் 350 பேரும், புறநகரில் சுமார் 400 பேரும் பணிபுரிந்தோம். நாள் ஒன்றுக்கு ரூ. 560 ஊக்கத்தொகை வீதம் 90 நாட்களுக்கு பணம் வழங்கவில்லை. இதுகுறித்து பொறுப்பாளர்களிடம் கேட்டால், தமிழகம் முழுவதுமே ஊக்கத்தொகை வழங்கவில்லை எனக் கூறுகின்றனர்.

முன்களப் பணியாளர் என்ற அடிப்படையில் எங்களுக்கும் ரூ. 5 ஆயிரம் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். எங்களுக்கான உபகரணங்களும் (கிட்) தாமதமாகவே வழங்கப்பட்டன. எங்களுக்கு உரிய நேரத்தில் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ஆண்டுக்கு இரு இலவச சீருடைகளை உரிய காலத்தில் வழங்கவேண்டும். வெளியூரில் வேலைக்குச் சென்றால் அதற்கு உணவுப்படி கிடைப்பதில்லை. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

ஊர்க்காவல் படை பொறுப் பாளர் ஒருவர் கூறுகையில், ‘‘கரோனா ஊக்கத் தொகை தொடர்பாக நினைவூட்டல் கடிதம் அனுப்பி உள்ளோம். ஏடிஜிபி நடவடிக்கை எடுக்கவேண்டும்.’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x