கூடலூர் அருகே புலியின் நடமாட்டம் கேமராவில் பதிவு

கூடலூர் அருகே புலியின் நடமாட்டம் கேமராவில் பதிவு
Updated on
1 min read

கூடலூர் அருகே தோட்டத் தொழிலாளியை கொன்ற புலியின் நடமாட்டம், அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன.

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட் சிக்கு உட்பட்டது வுட்பிரையர் எஸ்டேட். இங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளி மது ஓரன் என்பவரை புலி தாக்கிக் கொன்றது. இதனால், கூடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மனித வேட்டை புலி பற்றிய பீதி ஏற்பட்டுள்ளது.

புலியைப் பிடிக்க வுட்பிரையர் எஸ்டேட் பகுதியில் 8 கூண்டுகள், 30 கண்காணிப்பு கேமராக்கள் அமைக் கப்பட்டுள்ளன. அதிரடிப்படை, வனத்துறை மற்றும் ஆயுதப்படை பிரிவு போலீஸார் அடங்கிய 3 குழுக்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், அங்கு பொருத்தப்பட்டுள்ள கண் காணிப்பு கேமராக்களில் புலி நடமாட்டம் பதிவாகியுள்ளன.

இது தொடர்பாக வனத்துறை யினர் கூறும்போது, “கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள ஆண் புலிக்கு சுமார் 6 முதல் 8 வயதி ருக்கும். அதன் இடது முன்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால், எளிதாக கிடைக்கும் இரையை தேடுகிறது எனத் தெரிகிறது. நடமாட முடியாததால், விரைவில் புலி பிடிபடும்” என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in