

இந்த தீபாவளி வளமான தமிழகத்தையும், வலிமையான பாரதத்தையும் ஏற்படுத்தக் கூடிய தீபாவளியாக அமையட்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் தீப ஒளியேற்றி அனைவராலும் கொண்டாடப்படுகிறது. கரோனாவிற்குப் பிறகு ஒளிமயமான எதிர்காலத்தை இந்திய மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் கிடைப்பதற்கான நல்ல சூழலை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த அனைத்து தரப்பு மக்களின் வாழ்கைத் தரம் உயர தீபாவளி திருநாளில் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.
வளமான தமிழகத்தையும், வலிமையான பாரதத்தையும் ஏற்படுத்தக் கூடிய தீபாவளியாக இந்த தீபாவளியின் தொடக்கம் அமையட்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.