Published : 14 Oct 2021 05:56 am

Updated : 14 Oct 2021 07:24 am

 

Published : 14 Oct 2021 05:56 AM
Last Updated : 14 Oct 2021 07:24 AM

சிறப்பாசிரியர் தேர்வுக்கான புதிய பட்டியல் வெளியீடு: அக். 23, 24-ல் சான்றிதழ் சரிபார்ப்பு

teachers-exam-new-list

சென்னை

தையல், ஓவியம், இசை ஆகிய சிறப்பாசிரியர் தேர்வுக்கான, திருத்தப்பட்ட புதிய தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம்இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சிறப்பாசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்பும் வகையில் கடந்த 2017-ம் ஆண்டு போட்டித்தேர்வு நடத்தப்பட்டு, 2018-ல் அதன் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து, அதே ஆண்டு தற்காலிக தேர்வுப் பட்டியல் வெளியானது.


உயர் நீதிமன்ற உத்தரவின்படி, திருத்தப்பட்ட தற்காலிக தேர்வுப் பட்டியல் 2019 செப். 9-ம் தேதி வெளியிடப்பட்டது. வழக்குகள் காரணமாக, குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்கிவைக்கப்பட்டன.

இந்நிலையில், 2018 ஆகஸ்ட் 13-ம் தேதி நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில், தையல், ஓவியம், இசை ஆகிய 3 பாடங்களுக்கு திருத்தப்பட்ட தேர்வுப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், தகுதியான விண்ணப்பதாரர்கள் கிடைக்காத காரணத்தால் ஏற்பட்ட காலியிடங்களுக்கு நடத்தப்பட உள்ள, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின பட்டியலும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு வரும் 23, 24-ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியல்களில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின், ஓவியம் (17stdrawinggrievance@gmail.com),தையல் (17stsewinggrie vance@gmail.com), இசை (17stmusicgrievance@gmail.com)ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு தகவல் அனுப்பி,முறையிடலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




சிறப்பாசிரியர் தேர்வுக்கான புதிய பட்டியல்சான்றிதழ் சரிபார்ப்புதையல் ஓவியம் இசைசிறப்பாசிரியர் தேர்வுஆசிரியர் தேர்வு வாரியம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x