

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேமுதிக எழுச்சியோடு செயல்படுகிறது. தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது வந்து போகும். மீண்டும் தேமுதிகவை தூக்கி நிறுத்துவோம். மக்கள் எங்களை தேர்தல் நேரத்தில் அங்கீகரிக்காததால் தோல்வியுற்றோம். எங்களின் வாக்கு சதவீதம் அப்படியே உள்ளது. கட்சி தொடங்கியதன் லட்சியத்தை நோக்கி தொடர்ந்து பயணிப்போம்.
திமுகவுடன் கூட்டணி குறித்து காலம் தான் பதில் சொல்லும். முதல்வர் ஸ்டாலின் நல்ல திட்டங்களைக் கொண்டு வந்து சிறப்பான ஆட்சி செய்கிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். அவர் பழைய நிலைக்குத் திரும்ப இன்னும் சிறிது நாட்கள் ஆகும். மக்களை சந்திக்க வேண்டிய நேரத்தில் அவர் சந்திப்பார் என்று கூறினார்.