

சட்டப்பேரவைத் தேர்தலில் தலித் அல்லாதோர், பெண்களுக்கும் விடு தலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்க திட்ட மிட்டுள்ளோம் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.
திமுக, அதிமுக கூட்டணியில் இருந்தபோது, ஒற்றை இலக்க எண் ணிக்கையிலேயே விடுதலைச் சிறுத் தைகள் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப் பட்டன. இந்தத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்துள்ள அக்கட் சிக்கு அதிக தொகுதிகளில் போட்டி யிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இது தொடர்பாக ‘தி இந்து’விடம் திருமாவளவன் கூறியதாவது:
ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு பிரச்சினை பிரதானமாக இருக்கும். 2009-ல் இலங்கை பிரச்சினை, 2014-ல் மதவாதம் என பல விஷயங்களை அடிப்படையாகக் கொண்டே கூட்டணி அமைத்தோம். அந்த வகையில், இந்தத் தேர்தலில் ஊழலும் மதுவும் முக்கிய பிரச்சினையாக உள்ளன. எனவேதான் மக்கள் நலக் கூட்ட ணியை தேர்வு செய்தோம். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் கட்டணத்தோடு விருப்ப மனு பெற்றோம்.
இந்தத் தேர்தலில் கட்டணமின்றி 234 தொகுதிகளுக்கும் மனுக்களை பெறுவது என்றும் அதன்பின் நேர்காணல் நடத்துவது என்றும் முடிவு செய்திருந்தோம். ஆனால், கட்சியின் நிர்வாகிகள் சிலர், போட்டியிடுகிற தொகுதிகளுக்கு மட்டுமே விருப்ப மனுக்களை பெறலாம். அந்த மனுக்களை சீராய்வு செய்து வேட் பாளர்களை நேர்காணலின்றி தேர்வு செய்யலாம் என்று கூறினர்.
அதன் அடிப்படையில், ம.ந. கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முடிந்த பிறகு, போட்டியிடுகிற தொகு திகளுக்கு மட்டுமே விருப்ப மனுக்களை வாங்க உள்ளோம். இதற்கு கட்டணம் கிடையாது. பெறப் பட்ட மனுக்களை எங்கள் கட்சியின் மையக்குழு ஆய்வு செய்து வேட் பாளர் பட்டியலை தயாரிக்கும்.
இந்தமுறை அதிக பொதுத் தொகு திகளில் போட்டியிடும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது. இதை உணர்ந்தே எங்கள் கட்சியில் உள்ள தலித் அல்லாத பிரிவினர் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
தலித் அல்லாதோர் மற்றும் பெண் களுக்கு பொதுத் தொகுதிகளில் வாய்ப்பு வழங்குவோம். எங்கள் கட்சி வட மாவட்டத்தில் மட்டுமே உள்ளது என்ற பிம்பம் உள்ளது. எனவே, தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் என தமிழகம் முழுவதும் பரவலாக போட்டியிடுவோம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.