கல்விச் சான்று வழங்குவதில் அலைக்கழிப்பு: எஸ்.வி.எஸ் கல்லூரி முன்னாள் மாணவர்கள் ஆட்சியரிடம் புகார்

கல்விச் சான்று வழங்குவதில் அலைக்கழிப்பு: எஸ்.வி.எஸ் கல்லூரி முன்னாள் மாணவர்கள் ஆட்சியரிடம் புகார்
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் மருத் துவக்கல்லூரியில் நிர்வாக ஒதுக் கீட்டில் படித்து வந்த மாணவர் கள் வேறு கல்லூரியில் சேர்ந்து படிக்க தேவையான ஆவணங் கள் கிடைக்காமல் அலைக்கழிக் கப்படுவதாக ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

கள்ளக்குறிச்சி அருகே பங்கா ரம் எஸ்.வி.எஸ் இயற்கை மருத் துவக்கல்லூரி மாணவிகள் 3 பேர் கடந்த ஜனவரி 23-ம் தேதி மர்மமான முறையில் இறந்தனர். இதையடுத்து, கல்லூரி மூடப் பட்டு, தாளாளர், முதல்வர் உள் ளிட்டோரை கைது செய்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

40 மாணவ, மாணவிகள்

இக்கல்லூரியில் படித்து பாதிக் கப்பட்ட மாணவர்கள், தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் அரசுக் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். அரசு கலந்தாய்வு மூலம் தேர்வாகி, அக்கல்லூரியில் படித்து வந்த மாணவர்களுக்கு, சென்னை அரசு கல்லூரியில் தற்போது சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அக்கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் படித்து, பாதிக்கப்பட்ட 40 மாணவ, மாண விகள் கல்லூரியில் இருந்து உரிய ஆவணங்கள் கிடைக்காததால் மாற்றுக் கல்லூரியில் சேர வழி யின்றி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று விழுப் புரம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்துக்கு வந்த மாணவர்கள், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் லட்சுமியி டம் மனு கொடுத்தனர்.

ஒதுக்கீட்டில் படித்தவர்கள்

அந்த மனுவில் கூறியிருப்ப தாவது: பாதிக்கப்பட்ட மாணவர் களை அரசுக் கல்லூரியில் சேர்க்க உத்தரவிட்டதன் பேரில், கலந் தாய்வு மூலம் தேர்வு பெற்று 2008-15 ஆண்டில் படித்து வந்த மாணவர்கள் அரசுக் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். ஆனால், நிர்வாக ஒதுக்கீட்டில் படித்து வந்த எங்களின் கல்விச் சான்றுகள், எஸ்.வி.எஸ் கல்லூரியிலேயே இருப்பதால், மாற்றுக் கல்லூரிக் கான சேர்க்கையை பெற முடியாமல் உள்ளது.

சென்னை எம்ஜிஆர் பல்கலைக் கழகம், தேர்வுக் குழுவிடம் கேட்டால் அக் கல்லூரியில் படித்ததற்கான கல்விச் சான்றுகள் வர வேண்டும் என்கின்றனர்.

கல்லூரி மீது நடவடிக்கை எடுத்த வருவாய் அதிகாரிகளிடம் கேட்டால், சிபிசிஐடி போலீஸுக்கு அனுப்புகின்றனர். சிபிசிஐடி போலீஸில் கேட்டால், ஆட்சியரிடம் கேளுங்கள் என்கின்றனர்.

இதனால் அலைக்கழிக்கப்பட்டு வருகிறோம். உரிய நடவடிக்கை எடுத்து எங்களின் கல்விச் சான்றுகளை அளிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட் டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in