புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் செப். 27 முதல் விருப்ப மனு பெறலாம்: பாஜக அறிவிப்பு

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் செப். 27 முதல் விருப்ப மனு பெறலாம்: பாஜக அறிவிப்பு
Updated on
1 min read

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை, கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு பெறலாம் என்று புதுச்சேரி மாநில பாஜக அறிவித்துள்ளது.

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் வரும் அக். 21,25,28 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடக்க உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. இந்நிலையில் புதுச்சேரி மாநில பாஜக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு பெறலாம் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் இன்று(செப்.25) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘புதுச்சேரியில் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மேயர், கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு விருப்பமனு தாக்கல் செய்யும் நபர்கள் அனைவரும் வரும் திங்கள்கிழமை

(செப். 27) முதல் புதன்கிழமை (செப். 29) வரை புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் அளிக்கப்படும் மனுவினை பெற்று அதை பூர்த்தி செய்து அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.’’இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in