சிவகங்கை அரசு மருத்துவமனையில் போதிய ஸ்டாண்ட் இல்லை: குளுக்கோஸ் பாட்டிலை நோயாளிகளின் உறவினர்கள் கையில் ஏந்தும் நிலை

சிவகங்கை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு ஏற்றும் குளுக்கோஸ் பாட்டிலை கையில் பிடித்துள்ள உறவினர்.
சிவகங்கை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு ஏற்றும் குளுக்கோஸ் பாட்டிலை கையில் பிடித்துள்ள உறவினர்.
Updated on
1 min read

சிவகங்கை அரசு மருத்துவமனையில் குளுக்கோஸ் பாட்டிலை நோயாளியின் உறவினர் கையில் ஏந்தும் நிலை உள்ளது. போதிய குளுக்கோஸ் ஸ்டாண்டுகளை வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சிவகங்கை அரசு மருத்துவமனையில் சில வார்டுகளில் குளுக்கோஸ் ஏற்றும் ஸ்டாண்ட் இல்லை. பல வார்டுகளில் குளுக்கோஸ் ஏற்றும் வகையில் மேற்கூரையில் அமைக்கப்பட்டிருந்த கொக்கிகளும் சேதமடைந்துவிட்டன. அறுவை சிகிச்சைக்கு பிறகு அனுமதிக் கப்படும் பெண்கள் வார்டில் குளுக்கோஸ் ஸ்டாண்ட் இல்லாததால் குளுக்கோஸ் பாட்டில்களை உறவினர்களை கையில் பிடிக்கச் சொல்லி நோயாளிகளுக்கு ஏற்றுகின்றனர். அனைத்து வார்டுகளிலும் தேவையான குளுக் கோஸ் ஸ்டாண்டுகளை வைக்க வேண்டுமென கோரிக்கை எழுந் துள்ளது.

மருத்துவர்கள் கூறுகையில், மேற்கூரைகளில் உள்ள கொக்கிகள் சேதமடைந்துவிட்டன. இதனால் அவசரமான நேரங்களில் உறவினர்களை பிடிக்க சொல்லும் நிலை ஏற்படுகிறது. ஆனால் மற்ற நேரங்களில் வேறு வார்டுகளில் உள்ள ஸ்டாண்டுகளை பயன் படுத்துகிறோம் என்று கூறினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in