உரிய வடிகால் வசதி இருந்திருந்தால் வெள்ளப் பாதிப்பை தடுத்திருக்க முடியும்: சென்னை வளர்ச்சி, ஆய்வு நிறுவன பேராசிரியர் கருத்து

உரிய வடிகால் வசதி இருந்திருந்தால் வெள்ளப் பாதிப்பை தடுத்திருக்க முடியும்: சென்னை வளர்ச்சி, ஆய்வு நிறுவன பேராசிரியர் கருத்து
Updated on
1 min read

தமிழக அரசின் அறிவியல் நகரம் சார்பில் சென்னை அறிவியல் விழா, ராணி மேரி மகளிர் கல்லூரியில் நேற்று கொண்டாடப்பட்டது. விழா வுக்கு அறிவியல் நகரம் துணைத் தலைவர் உ.சகாயம் தலைமை தாங்கினார். அடை யாறு புற்றுநோய் மருத்துவ மனையின் தலைவர் டாக்டர் வி.சாந்தா விழாவை தொடங்கி வைத்தார். இதில் பேராசிரியர் ஜனகராஜன், ‘பேரிடர் மேலாண்மை’ என்ற தலைப்பில் பேசியதாவது:

சென்னைக்கு பெருவெள் ளம் புதிதல்ல. பிரச்சினை என்னவென்றால் வெள்ள நீர் வெளியேற போதிய வடிகால் வசதி செய்யப்படவில்லை என்பதுதான். உரிய வடிகால் வசதி இருந்திருந்தால் சென் னையில் ஏற்பட்ட பெருவெள் ளப் பாதிப்புகளை தடுத்திருக்க முடியும்.

சென்னையின் வட பகுதி யில் வெள்ள நீர் வெளியேற கொசஸ்தலை ஆறு, மத்திய பகுதியில் கூவம், தென்பகுதி யில் அடையாறு, இன்னும் சற்று தென்பகுதியில் பாலாறு, மேலும், மனிதர்களால் உரு வாக்கப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாய், இன்னும்16 சிறு சிறு கால்வாய்கள் இருக்கின் றன. அடையாறு 2 லட்சம் கன அடி வெள்ள நீரை கொண்டு செல்லக்கூடிய திறன் பெற்றது. போதுமான முன்னேற்பாடுகள் செய்யப்படாததே வெள்ளப் பாதிப்புக்களுக்குக் காரணம்.

பெருவெள்ளத்தின்போது 3 டிஎம்சி வெள்ளநீர் வீணாக கடலுக்குப் போய்விட்டது. சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர் மாவட்டங்களில் 3,100 ஏரிகள் உள்ளன. இவற் றில் 70 டிஎம்சி தண்ணீரை சேமிக்க முடியும். வெள்ளம் வழிந்தோடிய அந்த ஏரிகள் இப்போது வறண்டு கிடக்கின் றன. இவ்வாறு பேராசிரியர் ஜனகராஜன் கூறினார்.

சென்னை அறிவியல் விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட ஓவியம், பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சகாயம் பரிசுகளை வழங்கினார்.

அண்ணா பல்கலைக்கழக படிக வளர்ச்சி மைய இயக்கு நர் அறிவுஒளி, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநர் அய்யம்பெருமாள், ராணி மேரி கல்லூரி முதல்வர் அத்தர் பேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, பல் கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவி களின் அறிவியல் கண்காட் சியை சகாயம் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in