

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
அருப்புக்கோட்டையில் அவர் செய்தி யாளர்களிடம் நேற்று கூறியதாவது: வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், மோடி அரசின் கொள் கைகளை எதிர்த்தும் இன்று முதல் (செப்.20) ஒரு வாரத்துக்குப் போராட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் திமுக தலை மையில் அனைத்துக் கட்சிகள் சார்பில் வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெறுகிறது. தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்குக் கோரும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து சட்டமாக்க வேண்டும். தமிழ்நாட்டில் பாஜக தலைகீழாக நின்றாலும் ஆட்சியைப் பிடிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.