

காவலர் முதல் ஆய்வாளர்கள் வரை அரசு பேருந்துகளில் அடை யாள அட்டைகளை காட்டி இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்பன உள்ளிட்ட தமிழக முதல்வரின் அறிவிப்பை காவல்துறையினர் வரவேற்றுள்ளனர்.
தமிழக காவல் துறையில் டிஜிபி தலைமையில் சட்டம், ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஏடிஜிபி, ஐஜி, டிஐஜி, எஸ்பிக்கள், டிஎஸ்பி, ஆய்வாளர்கள், காவலர்கள் என சுமார் 1,21,500-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
இவர்களில் 10 சதவீதத்துக்கு மேல் மகளிர் போலீஸார். அதிகாரிகள் தவிர்த்து, டிஎஸ்பி முதல் காவலர்கள் வரை உரிய நேரத்தில் பதவி உயர்வு, பணப்பலன் போன்ற சலுகைகள் எனக் காவலர்களின் கோரிக்கைகள் கிடப்பில் இருப்பதாகவும், சட்டப் பேரவையில் காவல் துறைக்கான மானியக் கோரிக்கை விவாதத்தில் இது குறித்த அறிவிப்புக்கள் வெளியிடப்படுமா என காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு, சிறைத்துறையினர் எதிர்பார்ப்பில் இருந்தனர்.
இது தொடர்பாக இந்து தமிழ் திசை நாளிதழிலும் சிறப்புச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் காவல்துறை மானியக் கோரிக்கையின்போது, தமிழக முதல்வர் காவலர்களின் கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக, சிறப்பு குறைதீர்க்கும் முகாம், அரசு பேருந்துகளில் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை பணி செய்யும் மாவட்டத்துக்குள் அடையாள அட்டைகளைக் காட்டி இலவச பயணம், இது வரை வாய்மொழி உத்தரவாகவே இருந்த இரண்டாம் நிலைக் காவலர் முதல் தலை மைக் காவலர் களுக்கான ஒரு நாள் வார விடுப்பு நடைமுறை, அரசு மருத்துவமனைகளில் ஆண்டு தோறும் காவலர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வது போன்று, அவர்களின் மனைவி களுக்கு சிறப்பு மருத்துவப் பரி சோதனை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை காவல்துறையினர் வரவேற்றுள்ளனர்.
மதுரை காவல்துறையினர் கூறியதாவது: முதல்வர் அறிவிப் பில் காவல்துறையினர் எதிர் பார்த்த சில கோரிக்கைகள் அடங்கிய அறிவிப்புகளும் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி. பணப்பலன், பதவி உயர்வு, வார விடுமுறை, குறைதீர் முகாம் போன்ற கோரிக்கைளையும் துரிதமாக நிறைவேற்றவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.