

பாராலிம்பிக்கில் பாட்மிண்டன் போட்டியில் பதக்கங்கள் வென்ற கிருஷ்ணா நாகர் மற்றும் சுஹாஸ் யாதிராஜ் ஆகியோருக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டோக்கியோவில் நடக்கும் பாராலிம்பிக், பாட்மிண்டன் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற கிருஷ்ணா நாகருக்கும், வெள்ளிப் பதக்கம் வென்ற சுகாஸ் யாதிராஜுக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ''டோக்கியோ பாராலிம்பிக்கில் பாட்மிண்டனில் இந்தியாவுக்கு மற்றொரு தங்கப் பதக்கத்தைச் சேர்த்ததற்காக கிருஷ்ணா நாகருக்கு வாழ்த்துகள். கிருஷ்ணா நாகர் அவரது போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினார்.
மேலும் பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுகாஸ் யாதிராஜுக்கும் எனது வாழ்த்துகள். பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் ஐஏஎஸ் அதிகாரி இவர்'' என்று பதிவிட்டுள்ளார்.