சென்னையில் ஒரே நாளில் 71 இண்டிகோ விமான சேவை ரத்து

நாளை முதல் நிலைமை சீராகும் என தகவல்
சென்னையில் ஒரே நாளில் 71 இண்டிகோ விமான சேவை ரத்து
Updated on
1 min read

சென்னை: சென்னை விமான நிலை​யத்​தில் நேற்று ஒரே நாளில் 71 இண்டிகோ விமான சேவை​கள் ரத்து செய்​யப்​பட்​டன. நாளை முதல் சேவை​கள் அதி​கரிக்​கும் என்று கூறப்​படு​கிறது.

இண்டிகோ ஏர்​லைன்ஸ் விமான சேவை​யில் ஏற்​பட்​டுள்ள பிரச்​சினை காரண​மாக, நேற்று அதி​காலை​யில் இருந்து நள்​ளிரவு வரை சென்​னை​யில் இருந்து டெல்​லி, மும்​பை, கொல்​கத்​தா, ஹைத​ரா​பாத், பெங்களூரு உள்​ளிட்ட நகரங்​களுக்கு செல்​லும் 38 விமானங்​கள், வெளியூர்​களில் இருந்து வரும் 33 விமானங்​கள் என மொத்​தம் 71 விமானங்​கள் ரத்து செய்​யப்​பட்​டன.

சென்​னை​யில் இருந்து இண்டிகோ ஏர்​லைன்ஸ் விமானத்​தில் பயணம் செய்​வதற்​காக முன்​ப​திவு செய்த பயணி​கள் பெரும்​பாலானோர், விமான டிக்​கெட்​களை ரத்து செய்து, வேறு விமானங்​களில் டிக்​கெட் முன்​ப​திவு செய்து வரு​கின்​றனர்.

டிக்​கெட்​களை ரத்து செய்​யும்​போது, அவர்​களது வங்​கிக்கணக்​குக்கு பணம் உடனடி​யாக வந்​து​விடும் என்று கூறப்​பட்​டாலும், பணம் வரு​வதற்கு தாமதம் ஏற்​படு​வ​தாக கூறப்​படு​கிறது.

ஏற்​கெனவே, விமானம் ரத்​தால் அவதிப்​படும் நிலை​யில், ரத்து செய்​யப்​படும் டிக்​கெட்​களுக்கு பணமும் உடனே கிடைக்​காத​தால் பயணி​கள் மிகுந்த சிரமத்​துக்கு ஆளாகின்​றனர். சென்னை விமான நிலை​யத்​தில் கடந்த 3 நாட்​களில் மட்​டும் 250-க்​கும் மேற்​பட்ட இண்டிகோ விமான சேவை​கள் ரத்து செய்​யப்​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது.

நாளை (டிச.10) முதல் இண்டிகோ ஏர்​லைன்ஸ் விமானங்​கள் ரத்து செய்​யப்​படு​வது குறைக்​கப்​பட்​டு, சேவை​கள் அதி​கரிக்​கும். 15-ம் தேதி முதல் வழக்​க​மான சேவை தொடங்​கும் என்று கூறப்​படு​கிறது.

சென்னையில் ஒரே நாளில் 71 இண்டிகோ விமான சேவை ரத்து
ஜெனரல் பிபின் ராவத் 4-ம் ஆண்டு நினைவு தினம்: ராணுவ அதிகாரிகள் அஞ்சலி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in