

கூட்டணி பேச்சுவார்த்தை ஆர் வத்தில் தமிழகத்தில் பாஜக வின் நிலையை கவனிக்க மறந்து விடாதீர்கள் என்று தமிழக பாஜக தலைவர்களுக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அறிவுரை வழங்கியுள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலை யொட்டி தமிழக பாஜகவின் மையக் குழுவுடன் பாஜக தலைவர் அமித்ஷா கொச்சியில் நேற்று ஆலோசனை நடத்தினார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, துணை தலைவர்கள் வானதி னிவாசன், கருப்பு முருகானந்தம், மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்கள் நேற்று நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தின் போது, தேஜ கூட்டணியில் தற்போதுள்ள கட்சிகளை தக்க வைக்க வேண்டும் என்று கூறிய அமித்ஷா, கூட்டணி பேச்சுவார்த்தை ஆர்வத்தில் பாஜகவின் செயல் பாடுகளையும், கட்சியின் அடிப்படை கட்டமைப்பை பலப் படுத்துவதையும் மறந்து விட வேண்டாம் என்று அறிவுறுத் தியதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.
இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:
தமிழக பாஜகவின் மையக் குழு அவ்வப்போது தேசிய தலைவருடன் ஆலோசனைகளை நடத்துவது வழக்கம். இந்த ஆலோசனைக் கூட்டம், முழுக்க முழுக்க உட்கட்சி நடவடிக்கைகள் சார்ந்ததாகவே அமையும். அந்த வகையில்தான் கொச்சியில் நடந்த ஆலோசனைக் கூட்டமும் அமைந்தது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக் காக பாஜகவை முதலில் வலுப்படுத்துகிற வேலைகளில் ஈடுபடுங்கள் என்று அமித்ஷா கூறினார். மேலும், ‘பூத் கமிட்டி அளவு வரை பாஜகவினர் பணியாற்ற வேண்டும். என்ன தான் வலுவான கூட்டணி அமைந்தாலும், பாஜக பல மாக இருந்தால்தான் வெற் றியை உறுதி செய்ய முடியும்’ என்றார். எனவே, கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஒருபுறமிருந்தாலும், பாஜகவை பலப்படுத்தும் நோக்கில் 234 தொகுதிகளிலும் ஊழியர்கள் கூட்டங்களை நடத்தி முடிக்கவுள் ளோம்.
இவ்வாறு தமிழிசை கூறினார்.