ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்து அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் நாளை முதல் 2 நாட்கள் ஆலோசனை: ஓபிஎஸ், பழனிசாமி தலைமையில் நடக்கிறது

ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்து அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் நாளை முதல் 2 நாட்கள் ஆலோசனை: ஓபிஎஸ், பழனிசாமி தலைமையில் நடக்கிறது
Updated on
1 min read

ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிக்கும் வகையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நாளை முதல் 2 நாட்கள் நடக்க உள்ளது.

புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதன் காரணமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்காத செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் வரும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.

இதுகுறித்து ஆலோசிக்கும் வகையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்த கட்சித் தலைமை திட்டமிட்டிருந்தது. இந்த சூழலில், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கடந்த 5-ம் தேதி காலமானதால், கட்சி சார்பில் 7-ம் தேதி வரை 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இதனால், 9 மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் சென்னைராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 11, 12-ம் தேதிகளில் நடக்கிறது.

ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், முன்னாள் அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், 9 மாவட்ட எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in