கிழக்கு கடற்கரை சாலையில் விரிவாக்க பணிகளுக்கு விதித்த தடையை நீக்கி பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணிகளுக்கு விதிக் கப்பட்ட தடையை நீக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை- புதுச்சேரி இடையே, கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றுச்சூழல் அனுமதியின்றி, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழகம் மேற்கொண்டு வரும் விரிவாக்க பணிகளுக்கு தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த எஸ்.வெங்கடேஷ் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதை விசாரித்த அமர்வு, தற்போது பணிகள் நடைபெற்று வரும் திருவான்மியூர் அடுத்த அக்கரை முதல் மாமல்லபுரம் வரையிலான 33 கிலோ மீட்டர் நீள சாலை விரிவாக்கப் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.
தமிழக அரசு சிறப்பு வழக்கறிஞர் அப்துல் சலீம் ஆஜராகி, “சாலை விரிவாக்கப் பணியில் 100 கிலோ மீட்டர் தூரம் மாநில நெடுஞ்சாலை வந்தால், சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என விதிகள் உள்ளன. மேலும் பணிகள் 85 சதவீதம் முடிந்துவிட்டன. சாலை விரிவாக்கம் செய்யப்படாததால் அங்கு விபத்துகள் அதிகமாக நடந்து வருகின்றன. எனவே இடைக்காலத் தடையை நீக்க வேண்டும்’ என்று நேற்று முன்தினம் வாதிட்டிருந்தார்.
இந்நிலையில் இம்மனு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில் நுட்பத்துறை உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன் னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பொதுமக்களின் நலன் கருதி, சாலை விரிவாக்கப் பணிகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கப்படு கிறது என்று அமர்வின் உறுப்பினர் கள் உத்தரவிட்டனர். மனு மீதான விசாரணை மார்ச் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
