

மு.க.அழகிரியின் தீவிர ஆதர வாளரான முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா, மீண்டும் திமுகவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாநகர திமுக செயலாளராக இருந்த மாலைராஜா, கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதாக கூறி, கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பரில் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கப்பட்டார். அப்போது முதல் கட்சிப் பணியில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை மாலை ராஜா நேற்று சந்தித்தார். அதைத் தொடர்ந்து அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு அவர் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. மாலைராஜா மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.