

அவசர பணிக்காக அரசு பஸ்களில் பயணம் செய்யும் போலீஸாருக்கு வாரண்ட் ரசீது பெறுவதில் விதி விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
பணி நிமித்தமாக அரசு பேருந்துகளில் சீருடையுடன் பயணம் செய்யும் சில போலீஸார் நடத்துநர்களிடம் போலீஸ் எனக் கூறுவது வழக்கம். ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பரில் திருச்சியில் இருந்து கடலூருக்குச் சென்ற அரசு பேருந்தில் சீருடை இன்றி பயணம் செய்த காவலர் ஒருவர் டிக்கெட் எடுக்காமல் சென் றார். அப்போது அவருக்கும், நடத்துநருக்கும் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் நடத்துநர் மயங்கினார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது தொடர்பாக மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. டிக்கெட் எடுக்க மறுத்த காவலர் நடத்துநரிடம் செய்த வாக்குவாதத்தால் மார டைப்பு ஏற்பட்டு, அவர் இறக்க நேர்ந்தது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் மனித உரிமை ஆணையம் சில உத்தரவுகளை பிறப்பித்தது. அது காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் கடந்த மார்ச்சில் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்துப் பிரிவு காவல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில், இனிமேல் அரசு பேருந் துகளில் நடத்துநர்களிடம் மோதல் போக்கு ஏற்படாமல் இருக்க வாரண்ட் இன்றி பயணம் செய்யக் கூடாது. இலவசமாகப் பயணம் செய்யாமல் முறையாக டிக்கெட் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். இது காவல் துறையில் சாத்தியமா என்ற கேள்வி எழுந் துள்ளது.
திடீர் மறியல், கொலை, அடிதடி போன்ற சம்பவங்கள் நிகழும்போது, அவ்விடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் போலீ ஸாருக்கு காவல் நிலையத்தில் இருந்து உடனடியாக வாரண்ட் ரசீது கொடுக்க இயலாத சூழல் சில நேரத்தில் உருவாகிறது. எனவே பணி நிமித்தமாகச் செல்லும் போலீஸாருக்கு விதிவிலக்கு அளிக்கலாம் எனவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஒருவர் கூறியது:
பொதுவாகக் காவலர்கள் அரசு பேருந்துகளில் பணி நிமித்தமாகச் செல்லும்போது டிக்கெட்டுக்குப் பதிலாக வாரண்ட் ரசீது உள்ளதாக சொன்னால் நடத்துநர்களும் கணக் கில் எடுத்துக் கொள்வர்.
சுமார் 36 கி.மீ. வரை அரசு பேருந்துகளில் வாரண்ட் ரசீதுடன் பயணிக்கலாம் என்ற நடைமுறை உள்ளது. பிறகு உயர் காவல் அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் மொத்த ரசீதுகளுக்கும் பணம் வசூலிக்கப்படும்.
ஆனால் எல்லா நேரங் களிலும் வாரண்ட் ரசீது பெறுவது சாத்தியமாகாது. அவசர நிமித் தமாக அனுப்பி வைக்கும்போது, வாரண்ட் ரசீதில் விவரங்களைக் குறிப்பிட்டு கையெழுத்திடும் அதிகாரிக்காக சில நேரம் காத்தி ருக்கும் சூழல் ஏற்படும். அப்போது குறித்த நேரத்தில் குற்றங்களைத் தடுக்கவோ, பாதுகாப்பு பணிக்கோ செல்ல முடியாது.
சில நேரத்தில் வாரண்ட் ரசீது புத்தகம் காவல் நிலையத்தில் தீர்ந் தால், உடனே அனுப்ப முடியா மல் போகலாம். கைதிகளை அழைத்துச் செல்லுதல், விசார ணைக்கு வெளியூர் பயணம் போன்ற முன்கூட்டியே திட்டமிடும் போது, முறையாக வாரண்ட் ரசீது பெறலாம். அவசரமாகச் செல் லும்போது சிரமம் ஏற்படலாம்.
சொந்த காரணத்துக்காக குடும் பத்தினருடன் செல்லும் காவ லர்கள் டிக்கெட் எடுக்க வேண்டும் என்பது சரியானது. இதில் சலுகை எதிர்பார்ப்பதும் தவறு.
பணி நிமித்தமாக அந்தந்தக் காவல்நிலைய எல்லைக்குள் பேருந்துகளில் தினமும் பயணிக்க நடைமுறைச் சிக்கலை கருத்தில் கொண்டு வாரண்ட் ரசீது பெறு வதில் காவல்துறையினருக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.