தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு
Updated on
1 min read

ராமேசுவரம்: எல்லை தாண்​டிய குற்​றச்​சாட்​டின் பேரில் தமிழக மீனவர்​கள் 7 பேரை இலங்கை கடற்​படை​யினர் சிறை பிடித்​தனர். ராமேசுவரம் மீன்​பிடி துறை​முகத்​தில் இருந்து புதன்கிழமை சுமார் 400 விசைப்​படகு​களில் 2 ஆயிரத்​துக்​கும்மேற்​பட்ட மீனவர்​கள் கடலுக்​குச் சென்​றனர்.

நெடுந்​தீவு அருகே ராமேசுவரத்தைச் சேர்ந்த சசிக்​கு​மார் என்​பவருக்கு சொந்​த​மான விசைப்​படகில் புதன்​கிழமை நள்​ளிரவு மீன்​பிடித்து கொண்​டிருந்​த​போது எல்லை தாண்​டியதாக இலங்கை கடற்​படை​யினரால் சிறை பிடிக்​கப்​பட்​டனர்.

அதைத்தொடர்ந்து, படகிலிருந்த ராமர் (38), வீரணன் (55), கருப் பையா (53) ஆபிரஹாம் (23 ஆகிய 4 மீனவர்​களை கைது செய்து ஊர்​காவல்துறை கடற்​படை முகா​முக்கு இலங்கை கடற்​படை​யினர் அழைத்​துச் சென்​றனர்.

மேலும் நெடுந்​தீவு கடற்​பரப்பில் மீன் பிடித்துவிட்டு திரும்​பிக் கொண்​டிருந்த சிம்​சன் என்​பவருக்குச் சொந்​த​மான மீன்​பிடி விசைப்​படகின் பக்​க​வாட்டு பகு​தி​யில் உள்ள மரப்​பலகை உடைந்து கடல் நீர்படகுக்​குள் புகுந்​த​தால், நேற்று (வி​யாழக்​கிழமை) அதி​காலை நடுக்​கடலில் மூழ்​கியது.

படகில் இருந்த சீனி​வாசன், செபஸ்​தி​யான், சூசை வியாகுலம் ஆகிய 3 மீனவர்​களும் கடலில் குதித்து ஐஸ் பெட்டி மற்​றும் டீசல் கேன்​களை பிடித்த வண்​ணம் வெகுநேர​மாக தத்​தளித்து கொண்​டிருந்​தனர்.

இவர்​களை இலங்கை கடற்​படை​யினர் பத்​திர​மாக மீட்டு ஊர்​காவல்​துறை கடற்​படை முகா​முக்கு கொண்டு வந்​தனர். 7 மீனவர்​களை​யும் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி நீதி​மன்​றக் காவலில் யாழ்ப்​பாணம் சிறை​யில் அடைத்தனர்.

தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு
தவெக நிகழ்ச்சியில் நடனமாடிய அரசு பள்ளி தலைமை ஆசிரியை ‘சஸ்பெண்ட்’

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in