வெளியில் தெரியாமல் தமிழ் தொண்டாற்றுவோரை அங்கீகரிக்கவே ‘சொல்வேட்டை’ நூல் வெளியீடு: நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் பெருமிதம்

வெளியில் தெரியாமல் தமிழ் தொண்டாற்றுவோரை அங்கீகரிக்கவே ‘சொல்வேட்டை’ நூல் வெளியீடு: நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் பெருமிதம்
Updated on
1 min read

வெளியில் தெரியாமல் தமிழ்த் தொண்டாற்றி வருவோரை அங்கீகரிக்கவே சொல்வேட்டை நூல் வெளியிடப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெ.ராம சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் உருவாக்கிய “சொல் வேட்டை” என்ற நூல் வெளியீட்டு விழா மயிலாப்பூரில் நேற்று நடைபெற் றது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் அவ்வை து.நடராஜன் விழாவுக்கு தலைமை வகித்தார். தினமணி நாளிதழ் ஆசிரியர் கே.வைத்தியநாதன் முன்னிலை வகித்தார். சிலம் பொலி சு.செல்லப்பன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நூலை வெளியிட, புழல் சிறைவாசி புதுராஜா பெற்றுக்கொண்டார்.

விழாவில் நீதிபதி ராமசுப்பிர மணியன் பேசியதாவது: தமிழுக்கு தொண்டு செய்பவர்களில் வெளி யில் தெரிபவர்கள் 10 பேர் என்றால், வெளியில் தெரியாமல் தமிழ் ஆர்வம் காரணமாக தொண்டு செய்துகொண்டிருப்பவர்கள் 10 ஆயிரம் பேர் இருப்பார்கள்.

அத்தகைய வாசகர்கள் எழுதும் கருத்து மலர்களை ஒன்றாக கோர்த்து, ஒரு நாராக நானிருந்து தொகுத்தேன். அப்படித்தான் “சொல் வேட்டை” நூல் உருவா னது. அவர்களின் அறிவும், தமிழ்ப் பணியும் வெளியில் தெரியாமல் இருக்கிறது. இந்த நூலை வெளி யிடுவது, அவர்களுக்கெல்லாம் ஒரு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தான்.

“சொல் வேட்டை” நூலை உரு வாக்கியபோது, புதுப்புது செய்தி களை வாசகர்கள் என்னை அறிய வைத்ததுடன், தேடவும் வைத்தது மகிழ்ச்சியளித்தது’’ என்றார்.

சிறைவாசி சிறப்பிப்பு

இவ்விழாவில் வெளியிடப்பட்ட நூலைப் பெற்றுக்கொண்ட புது ராஜா, புழல் சிறைவாசியாக இருப்பவர். கடந்த 2001-ல் அவரது மனைவி இறந்தது தொடர்பாக, ஆயுள் தண்டனை பெற்று, கடந்த 8 ஆண்டுகளாக புழல் சிறையில் உள்ளார். விழாவில் அவர், நீதிபதி ராமசுப்பிரமணியனுக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தார். அவரை இவ்வாறு சிறப்பித்தது குறித்து, புதுராஜாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: நான் சென்னை மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்தேன்.

சிறை சென்ற பின், அங்கு 8, 10-ம் வகுப்பு படிக்கும் சிறை வாசிகளுக்கு பாடம் எடுத்து வருகி றேன். சிறையினுள் உள்ள மருத் துவ அலுவலர்களுடன் சேர்ந்து, சிறையை தூய்மையாக பராமரிப் பது, தூய குடிநீர் வசதி, உணவு தயாரிப்பு போன்றவற்றில் என்னை ஈடுபடுத்திக்கொள்கிறேன். சிறையில் இருந்தவாறு பிஎஸ்சி உளவியல் படிப்பை முடித்து, சிறைவாசிகளுக்கு மனநல ஆலோ சனைகள் வழங்கி வருகிறேன்.

‘சொல் வேட்டை’ பகுதி வெளி வந்தபோது, எனக்கு தெரிந்த வார்த்தைகளை சிறையிலிருந்து கடிதத்தில் எழுதி அனுப்பினேன். அது நீதிபதி ராமசுப்பிரமணியத்தை பெரிதும் கவர்ந்தது. பின்னர் அவர், எனது சேவையை அங்கீ கரித்து, விழாவில் நூலை பெற்றுக் கொள்ள அழைத்தார். இவ்விழா வுக்காக நான் பரோலில் வெளிவந் திருக்கிறேன். இது எனது பணிக்கு கிடைத்த பரிசு. இவ்வாறு சிறப்பித்த நீதிபதிக்கு எனது நன்றியை தெரி வித்துக்கொள்கிறேன் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in