

தமிழக அரசின் இடைக்கால பட் ஜெட்டில் பள்ளிக்கல்வி துறைக்கு ரூ.24,820 கோடியும், உயர்கல்வித் துறைக்கு ரூ.3,821 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து இடைக்கால பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்ப தாவது:
கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.86,193 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2016-17-ம் ஆண்டுக்கான இடைக் கால பட்ஜெட்டில் இத்துறைக்கு ரூ.24,820 கோடி ஒதுக்கப்பட் டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 221 ஆரம்பப் பள்ளிகள் புதிதாக தொடங் கப்பட்டன. 112 ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளாகவும், 810 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாகவும் 402 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்ட விதிமுறைகளின்படி, பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த 2 லட்சத்து 31 ஆயிரத்து 404 குழந்தைகள், தனியார் பள்ளிகளில் படிக்கும் வாய்ப்பை இந்த அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதற்கென 2013-14 மற்றும் 2014-15 ஆண்டு களுக்கு தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணமாக ரூ.97 கோடியை அரசு வழங்கியுள்ளது.
அரசு பள்ளிகளில் ரூ.4,165 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், குடிநீர் வசதிகள், சுற்றுச்சுவர்கள், மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி கழிப் பறைகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த இடைக்கால பட்ஜெட்டில் அனைவருக்கும் கல்வி திட்டத் துக்கு (எஸ்எஸ்ஏ) ரூ.2,329 கோடி யும், தேசிய இடைநிலை கல்வி இயக்ககத்துக்கு (ஆர்எம்எஸ்ஏ) ரூ.1,139 கோடியும் ஒதுக்கப்பட் டுள்ளன.
புதிய கல்லூரிகள்
உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்கச் செய்யவும் புதிதாக 39 கலை, அறிவியல் கல்லூரிகளும் 4 அரசு பொறியியல் கல்லூரிகளும், 11 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 959 புதிய பாடப் பிரிவுகள் ஆரம் பிக்கப்பட்டுள்ளன. முதல் தலைமுறை பட்டதாரி மாணவர் களுக்கு கல்விக் கட்டணத்தை திரும்ப வழங்கும் திட்டத்தின்கீழ் கடந்த 5 ஆண்டுகளில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 609 பேருக்கு ரூ.2,544 கோடி வழங்கப்பட்டு அவர்கள் நிதிச் சுமையின்றி தொடர்ந்து உயர்கல்வி பயின்று வருகின்றனர். இடைக்கால பட்ஜெட்டில் இந்த திட்டத்துக்கு ரூ.579 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010-11-ல் ரூ.2,044 கோடியாக இருந்த உயர்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு, 2015-16-ல் ரூ.3,477 கோடியாக உயர்த்தப்பட்டது. அரசின் இந்த முயற்சிகளால் உயர்கல்வி சேர்க்கை குறிப்பாக ஆதி திராவிடர் களின் உயர்கல்வி சேர்க்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது. உயர்கல்வித் துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.3,821 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.