

சென்னையில் அரபி மொழி பற்றிய சர்வதேச கருத்தரங்கை இந்தியாவுக்கான பாலஸ்தீன நாட்டு தூதர் அட்னான் அபு அல்ஹைஜா தொடங்கிவைத்தார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் அரபி, பாரசீகம், உருது மொழித் துறை சார்பில் அரபு மொழி குறித்த 2 நாள் சர்வதேச கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் தொடக்கவிழா, பல்கலைக்கழகத் தில் நேற்று நடந்தது. கருத்தரங்கை இந்தியாவுக்கான பாலஸ்தீன நாட்டு தூதர் அட்னான் அபு அல்ஹைஜா தொடங்கிவைத்தார். அப்போது, சர்வதேச அளவில் அரபி மொழி யின் முக்கியத்துவத்தையும் பாலஸ்தீன நாட்டில் வழங்கப்படும் அரபிமொழி கல்வி முறையையும் எடுத்துரைத்தார்.
அரபி மொழிக்கு ஆற்றிய பணிகளை கவுரவிக்கும் வகையில் கோழிக்கோடு பல்கலைக்கழக அரபி மொழித்துறை முன்னாள் தலைவர் ஏ.ஐ.ரஹ்மதுல்லாவுக்கு 2014-ம் ஆண்டுக்கான சதக்கத் துல்லா அப்பா விருதும், கேரள பல்கலைக்கழக அரபி மொழித் துறை முன்னாள் தலைவர் ஏ.நிஸாருதீனுக்கு 2015-ம் ஆண்டுக் கான விருதும் வழங்கப்பட்டன.
முன்னதாக, கருத்தரங்க இயக் குநர் ஏ.ஜாகீர் உசேன் அறிமுகவுரை ஆற்றினார். சென்னை பல்கலை. அரபி, பாரசீகம், உருது மொழித் துறை தலைவர் சையது சஜ்ஜாத் உசைன், மாநிலக் கல்லூரி தமிழ்த் துறை தலைவர் ஆர்.ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.