மின்கம்பங்கள் சீரமைப்பு

மின்கம்பங்கள் சீரமைப்பு
Updated on
1 min read

`இந்து தமிழ்’ நாளிதழ் செய்தி எதிரொலியாக எட்டயபுரம் பேரூராட்சி பகுதியில் பழுதான நிலையில் இருந்த மின்கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்கள் நடும் பணி தொடங்கி உள்ளது.

எட்டயபுரம் பேரூராட்சியில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள தெருக்களில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மின்கம்பங்கள் பலவும், சிமென்ட் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிந்தன. தற்போது, காற்று அதிகமாக வீசுவதால், மின்கம்பங்கள் சாய்ந்து கீழே விழும் அபாயம் இருப்பது குறித்து, `இந்து தமிழ்’ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, பேரூராட்சியின் 13-வது வார்டுக்கு உட்பட்ட கான்சாபுரம் முதல் தெருவில் இருந்த பழுதான மின்கம்பங்களை மாற்றும் பணி நேற்று தொடங்கியது.

`பேரூராட்சி பகுதியில் பழுதான மற்றும் மோசமான நிலையில் மின்கம்பங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in