

தமிழகத்தில் வேளாண் துறைக்குதனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று வேளாண் துறைஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.
இம்மாதம் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அப்போது வேளாண் துறைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், வேளாண் துறைக்கான பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலர் வெ.இறையன்பு தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் தலைமைச்செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், வேளாண்மை, கால்நடைப் பாதுகாப்புத் துறைஉயரதிகாரிகள் கலந்துகொண்ட னர்.
வேளாண் பட்ஜெட்டில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை, கால்நடைப் பராமரிப்புத் துறைகளின் மேம்பாட்டுக்கான அம்சங்கள் இடம்பெறும் என்றும், இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் கூறப் படுகிறது.